Home news இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் - அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

நாட்டின் தலைநகரான டெல்லியில் பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் உணரப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நிலநடுக்கம்:

நிலநடுக்கம் என்பது மக்களின் வாழ்வை ஒரு சில நொடிகளில் மொத்தமாக மாற்றி விடக்கூடிய தன்மை வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே மக்கள் லேசான நிலநடுக்கத்தின் போது கூட மிகவும் அதிர்ந்து விடுகின்றனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவுகளில் 5 கிலோமீட்டர் ஆழத்திற்கு இரண்டு நிலநடுக்கங்கள், பிற்பகல் 2:25 மணி மற்றும் 2:51 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக டில்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. டெல்லியை தவிர்த்து உத்திரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா போன்ற பகுதிகளிலும், உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து மக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட தொடங்கினர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் & பொறியியல் கல்லூரிகளில் 5% இட ஒதுக்கீடு – மாநில அரசு அறிவிப்பு!

சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைய தொடங்கினர் இது தொடர்பாக டெல்லி காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும். அவசர உதவிக்கு 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here