Home news மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது அதிகரித்து வரும் ஓமைக்ரான் வகை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வரும் தகவல் குறித்து இந்த பதிவில் காண்போம்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கம் முதல் ஜூன் 30,2021 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 3 தவணைகளுக்கான DA குறித்து தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள DA குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் இறுதியாக 17% DA பெற்று வந்த ஊழியர்களுக்கு கூடுதலாக 11% DA வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது அமலுக்கு வந்தது.

இரயில்வே NTPC தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கட்டணம் ரிட்டன்ஸ்!

இந்நிலையில், 2021 ஜூலை தவணைக்கான DA உயர்வு கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு 3% உயர்த்தப்பட்டது. இதனால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியானது 31% ஆக உயர்ந்துள்ளது. 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரபூர்வ அறிக்கைகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 3% DA அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது போலியான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.

திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஜனவரி 18 முதல் விமான சேவை தொடக்கம்!

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 2022 ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலியான தகவல்கள் என்று அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் போலியானது என்று மறுத்த இந்திய பிரஸ் பீரோ, நிதி அமைச்சகத்தால் அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது. இது குறித்து PIB தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here