Home news IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இவரால் தான் நெருக்கடி? முன்னாள் வீரர்கள் கருத்து!

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இவரால் தான் நெருக்கடி? முன்னாள் வீரர்கள் கருத்து!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இவரால் தான் நெருக்கடி? முன்னாள் வீரர்கள் கருத்து!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இவரால் தான் நெருக்கடி? முன்னாள் வீரர்கள் கருத்து!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இவரால் தான் நெருக்கடி? முன்னாள் வீரர்கள் கருத்து!

IPL 2022 போட்டிகளுக்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு தீபக் சஹாரின் விலகல் ஒரு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

CSK அணி:

இந்த ஆண்டிற்கான IPL போட்டிகளின் 15வது சீசன் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் போட்டிகளை காண ஆயத்தமாகி வருகின்றனர். இந்த முறை IPL லீக்கில் குஜராத் மற்றும் லக்னோ உள்ளிட்ட 2 புதிய அணிகளின் வருகையால், மொத்தம் 10 அணிகள் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. இதனால் போட்டிகள் நடத்தப்படும் நாட்களின் நீளமும் அதிகரிக்க, ரசிகர்கள் களத்தில் நிகழும் பல்வேறு ஸ்வாரசியங்களை எதிர்பார்த்துள்ளனர். இப்போது மார்ச் 26ம் தேதியன்று வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் CSK மற்றும் KKR அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்த போட்டிக்காக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இப்போது IPL 2022 போட்டிக்காக கடுமையாக தயாராகி வரும் CSK அணிக்கு மிக நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, CSK அணியின் பவுலிங் பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக இந்த சீஸனின் பெரும் பகுதியை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக மெகா ஏலத்தில் CSK அணி தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்கு பெற்றிருந்தது. இப்போது இவரது விலகல் CSK அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி கூறுகையில், சஹார் இல்லாதது CSK அணிக்கு பெரிய நஷ்டமாகும். அவருக்கு மாற்றாக கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே இருப்பார்கள். ஆனால் அவர்கள் அணிக்குள் வந்தால் டெவோன் கான்வே வெளியே இருக்க வேண்டியிருக்கும்.

இப்போது தீபக் சஹாருக்கு பதிலாக மற்றொரு உள்நாட்டு வீரர் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, தீபக் சஹாருக்கு மாற்று வீரர் இருந்திருந்தால், அவர் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டிருக்க தேவையில்லை. ஒரு அணிக்கு முக்கியம் பவர் ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை எடுப்பது தான். இது தான் கடந்த சீசனில் CSK அணியின் வெற்றிக்கு தாரக மந்திரமாக இருந்தது. CSK அணியில் சஹார் இல்லையென்றால் பவர் ப்ளே ஓவர்களில் சிக்கல்கள் ஏற்படும். மேலும் CSK அணி, ஹங்கர்கேகர் குறித்தும் சிந்திக்கலாம் எனக் கூறி இருக்கிறார்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here