Home Entertainment ‘தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ‘ – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

‘தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ‘ – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

0
‘தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ‘ – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
'தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ' - வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
‘தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ‘ – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஐந்தாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டுள்ள முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.3 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதன் பின் 4 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 14 போட்டியாளர்களுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை அன்று சிறப்பு விருந்தினராக மாகாபா ஆனந்த் மற்றும் KPY பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது 2வது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால் – ரசிகர்கள் வாழ்த்து!

அதன் பின் செண்பகமே செண்பகமே டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் மோதிக் கொண்டு போட்டி போட்டு விளையாடினார்கள். அதில் வெற்றி பெற்ற 7 போட்டியாளர்கள் நேரடியாக தலைவர் போட்டியில் போட்டியிடலாம். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் கொளுத்தி போட்ட வெடி தற்போது நன்றாக வெடித்துக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் சொல்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

பின் தீபாவளி பண்டிகை காரணமாக இன்று எலிமினேஷன் இல்லை என நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம் கட்டாயம் இன்று எலிமினேஷன் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய எபிசோடில் தாமரைக்கும், பாவனிக்கும் இடையே பெரிய சண்டை நடந்தது. அதில் தாமரை பாவனியை அடிக்க கை ஓங்கினார். இது பற்றி கமல் விவாதம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here