Home Entertainment ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம்? அவரே அளித்த பதில்!

ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம்? அவரே அளித்த பதில்!

0
ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம்? அவரே அளித்த பதில்!
ஜீ தமிழ் 'சத்யா' சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம்? அவரே அளித்த பதில்!
ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம்? அவரே அளித்த பதில்!

சமீப காலமாக சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் திருமணம் செய்து வரும் நிலையில் ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஆயிஷா

விஜய் டிவியில் ‘பொன் மகள் வந்தாள்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை ஆயிஷா. கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகை ஆயிஷாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர் சின்னத்திரையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கிறார். மேலும், சீரியல் மட்டுமல்லாது சில ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆயிஷா.

விபத்தில் சிக்கிய “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘சத்யா’ என்ற சீரியலில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஆயிஷா அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய நடிகை ஆயிஷா அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.

ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய மாற்றம் – ரசிகர்கள் வாழ்த்து!

அதாவது, கடந்த சில வாரங்களாக தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி வரும் நிலையில் நடிகை ஆயிஷாவிடமும் திருமணம் குறித்த கேள்வியை ரசிகர்கள் கேட்டுள்ளனர். இந்த கேள்விக்கு, திருமணம் குறித்த பிளான் எதுவும் இல்லை என்றும் அது நடக்கும் போது கண்டிப்பாக சொல்லுகிறேன் எனவும் கியூட்டாக பதில் அளித்துள்ளார் நடிகை ஆயிஷா. நடிகையின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் சற்று உற்சாகமடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here