Home news தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள்! விண்ணப்பிக்கும் முறை!

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள்! விண்ணப்பிக்கும் முறை!

0
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள்! விண்ணப்பிக்கும் முறை!
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள்! விண்ணப்பிக்கும் முறை!
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள்! விண்ணப்பிக்கும் முறை!

நாடு முழுவதும் மக்களுக்கு குடியுரிமை சான்றாக ரேஷன் கார்டுகள் இருக்கிறது. மேலும் அரசின் முக்கிய நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. புதிதாக ரேஷன் கார்ட் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்ட்:

பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெற முக்கிய ஆவணமாக ரேஷன் கார்ட் இருக்கிறது. இந்த கார்ட் மூலமாக கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து இருக்கின்றனர். ஆனால் எளிமையாக ரேஷன் கார்ட் பெற முடியாது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

அதனால் பலர் ரேஷன் கார்ட் பெறாமல் இருக்கின்றனர். அரசின் நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் எளிதாக ரேஷன் கார்ட் பெற விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்ட் எவ்வாறு விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்

தமிழக மக்கள் ரேஷன் அட்டை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை.

  • ஆதார் அட்டை
  • மின் ரசீது
  • பான் கார்டு
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • வருமான சான்றிதழ்
  • வங்கி பாஸ்புக்
  • சாதி சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் https://www.tnpds.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின் முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்
  • இப்போது ஒரு படிவம் திரையில் தோன்றும். அந்த நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர் உங்கள் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
  • பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் போன்றவற்றை வழங்க வேண்டும்
  • பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு Reference எண் கிடைக்கும், அதை குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின் உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    [table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here