Home news தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27ன் படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

குறைதீர்ப்பாளர் நியமனம்

இந்தியாவில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27ன் படி வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் பல புகார்கள் வரும் நிலையில், அதனை தீர்க்க ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர்கள் நியமனம் செய்ய இருக்கின்றனர். அதன் படி தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கு ஒரு குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 103 காலிப்பணியிடங்கள் || B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக வேலை கோருதல்,ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, ஊதியம் அளித்தல், பணித்தள வசதிகள் போன்றவை குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரும் புகார்கள் அலுவலகத்தில் அல்லது கள ஆய்வின் போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களுக்கும் 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் மற்ற புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்க பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் ஆகியவை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வலைத்தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் 37 மாவட்டங்களின் குறைதீர்ப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடைய கைப்பேசி எண் ஆகியவை வெளியாகி இருக்கிறது

  • அரியலூர்- எஸ்.வைத்தீஸ்வரன் – 8925811301
  • செங்கல்பட்டு – தினேஷ்குமார் மார்ட்டின் – 8925811302
  • கோயம்புத்தூர்- பி, நவநீதகிருஷ்ணன் – 8925811303
  • கடலூர்- எம். ஏஞ்சல் கேத்தரின் – 8925811304
  • தருமபுரி – கே. தௌலத் பாஷா – 8925811305
  • திண்டுக்கல் – சி.ஓம் பிரகாஷ் – 8925811306
  • ஈரோடு – எல். பாலகிருஷ்ணன் – 8925811307
  • கள்ளக்குறிச்சி – பி.இரமேஷ் – 8925811308
  • காஞ்சிபுரம் – வி.கணேசன் – 8925811309
  • கன்னியாகுமரி – ஏ. சத்தியசீலன் – 8925811310
  • கரூர் – என். பாலசுந்தரம் – 8925811311
  • கிருஷ்ணகிரி – கே.எஸ்.எம்டி.அஸ்மத்துல்லா – 8925811314
  • மதுரை – பி.பாலசுப்ரமணியன் – 8925811315
  • மயிலாடுதுறை – டி.மோகன் – 8925811316
  • நாகப்பட்டினம் – எஸ்.முருகேசன் – 8925811317
  • நாமக்கல் – டி.சியாமளா – 8925811318
  • பெரம்பலூர் – பி.ஜானகிராமன் – 8925811319
  • புதுக்கோட்டை – எம். ரகோத்துமன் – 8925811320
  • ராமநாதபுரம் – பி.ராமமூர்த்தி – 8925811321
  • இராணிப்பேட்டை – ஜி.கோபிநாத் – 8925811322
  • சேலம் – எம்.காந்திமதி – 8925811323
  • சிவகங்கை – யு.பிரபு – 8925811324
  • தஞ்சாவூர்- ஆர்.கலைவாணி – 8925811325
  • நீலகிரி – எம்.என்.சிவதேவ்குமார் – 8925811326
  • தேனி – கே.சந்திரசேகரன் – 8925811328
  • தென்காசி – ஆர்.ஜெயகுமார் – 8925811329
  • தூத்துக்குடி – பி.சேவகபாண்டி – 8925811330
  • திருச்சிராப்பள்ளி – பி.பாண்டியராஜன் – 8925811331
  • திருநெல்வேலி – மாணிக் பிரபு – 8925811332
  • திருப்பத்தூர் – ஜெ. மகாலட்சுமி – 8925811338
  • திருப்பூர் – எம்.பிரேமலதா – 8925811339
  • திருவள்ளூர் – ஜே.சைமன் அருள்பிரகாசம் – 8925811340
  • திருவண்ணாமலை – யு.அண்ணாமலை – 8925811341
  • திருவாரூர் – வி.கதிரேசன் – 8925811342
  • வேலூர் – எல்.ரஞ்சிதா – 8925811344
  • விழுப்புரம் – என்.தஸ்லீம் ஆரிஃப் – 8925811345
  • விருதுநகர் – வி.பெரியசாமி – 8925811346
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here