Home Instagram மீண்டும் உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!

மீண்டும் உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!

0
மீண்டும் உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!
மீண்டும் உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!
மீண்டும் உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அட்சய திருதியை வரவுள்ள வேளையில் தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை

இந்தியாவில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தற்போது உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்து வருகின்றனர். அத்துடன் தங்கத்தின் மீதான முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு – நேற்று ஒரே நாளில் 10,542 பேருக்கு தொற்று உறுதி!

இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பர். இந்த வேளையில் தமிழகத்தில் தங்கத்தின் விலையானது இன்று திடீரென உயர்ந்துள்ளது. அதாவது இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 45 320 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ.5,665 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 81 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000 க்கும் விற்பனையாகி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here