Home news தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.30 குறைவு – நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.30 குறைவு – நிம்மதியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.30 குறைவு – நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.30 குறைவு – நிம்மதியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தக்காளி விலையானது இன்று ரூ.30 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பின் தக்காளி விலை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியில் இருக்கின்றனர்.

தக்காளி விலை

தமிழகத்தில் கடந்த சில வாரமாக காய்கறி விலையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது. தக்காளி விலையை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் தக்காளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்காக 60 முதல் 65 லாரிகளில் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லை – வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ஆனால் கடந்த சில வாரமாக 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வருகிறது. அதுவே விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 19) கோயம்பேடில் தக்காளி விலை அதிரடியாக ரூ.30 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பின் தக்காளி விலை குறைந்து இருப்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here