Home Instagram தமிழகத்தில் செப்.09 மெகா வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் செப்.09 மெகா வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் செப்.09 மெகா வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் செப்.09 மெகா வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் செப்.09 மெகா வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மதுரை, தர்மபுரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அவ்வப்போது மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகமானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை தர்மபுரி மற்றும் மதுரை மாவட்டத்தில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பாலையில் அமைந்துள்ள EMG யாதவர் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

தமிழகத்தில் சிலிண்டரின் விலை மீண்டும் அதிரடி குறைவு – தற்போதைய நிலவரம் என்ன?

அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாமானது காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலை வாய்ப்பை தேடி வரும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணி ஆணைகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முகாமிற்கு செல்ல விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here