Home news தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

இதில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (21.06.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here