Home news இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

0
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் - குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

மத்திய அரசின் அமைச்சகம் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. அரசின் விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்:

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு புதிய போக்குவரத்துக்கு விதிகளை அறிமுகம் செய்துள்ளது. முறையான தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்து ஏற்பட்டாலும் உயிரை காப்பாற்ற முடியும் என்பதால் அது தொடர்பான விதிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் மக்களின் நலனிற்காக அவ்வப்போது புதிய சாலை விதிகளை அறிவித்து மக்களை கடைபிடிக்க கேட்டுக் கொள்கிறார்கள். இருப்பினும், சாலை விபத்துகளை தவிர்க்க முடிவதில்லை. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் SSC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி நாளை தொடக்கம்!

இதனால் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகளின் படி, இரு சக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் 4 வயதிற்கு குறைவான குழந்தைகளை கொண்டு பயணிக்கும் போது 40 கி.மீ க்கும் அதிக வேகத்தில் ஓட்டக்கூடாது. மத்திய அரசு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த உத்தரவை அளித்துள்ளது. மேலும், இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பின்னால் இருக்கும் குழந்தைகளும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

மேலும், வாகன ஓட்டிகள் தங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தங்களுடன் இணைத்து இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் குறித்து மக்களின் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள விதிகளை மக்கள் முறையாக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை அடிப்படையாக கொண்டும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here