Home news இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் – 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் – 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

0
இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் – 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!
இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் - 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!
இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் – 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே மிகப்பெரிய கலவரம் வெடித்து வந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்கிற சமூகத்தினர் தங்களையும் எஸ்டி என்கிற பிரிவில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனால், மெய்தெய் சமூகத்தினருக்கும் பழங்குடியின மக்களுக்கும் கடந்த மே மூன்றாம் தேதி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்கிற பிரிவினரை எஸ்.டி பட்டியலில் சேர்க்க உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் மணிப்பூர் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி மிகப் பெரிய கலவரமாக உருவெடுத்தது.

குணசேகரனை போலீசில் மாட்டி விட்ட ஆதிரை – எதிர்நீச்சல் சீரியல் அதிரடி சம்பவங்கள்!

மேலும், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து வாகனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து உடைமைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இதனால் மணிப்பூரில் கலவரம் இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் ஜிரிபாம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் எந்தவித கலவரமும் இல்லாத காரணத்தினால் இந்த 11 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூர் தற்போது படிப்படியாக பழைய நிலைமைக்கு மாறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here