Home news இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு – அதிகரிக்கும் உணவுத்தட்டுப்பாடு!

இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு – அதிகரிக்கும் உணவுத்தட்டுப்பாடு!

0
இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு – அதிகரிக்கும் உணவுத்தட்டுப்பாடு!
இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு - அதிகரிக்கும் உணவுத்தட்டுப்பாடு!
இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு – அதிகரிக்கும் உணவுத்தட்டுப்பாடு!

பாகிஸ்தான் நாட்டில் பொதுமக்களுக்கு ரமலான் நோன்பு முன்னிட்டு இலவசமாக கோதுமை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உணவுத்தட்டுப்பாடு

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை குறைவான அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் வீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த 59 மருந்துகள் தரமற்றவை – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

இதனால் பொதுமக்கள் உணவு வாங்க கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ரமலான் மாதம் தொடங்கியுள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சில தொண்டு நிறுவனங்களும் மற்றும் அரசும் பொது மக்களுக்கு இலவசமாக கோதுமையை வழங்க முன்வந்துள்ளனர். இந்த இலவச கோதுமையை பெறுவதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் சில இடங்களில் பொதுமக்கள் பொறுமை காக்காமல், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு வாங்குகின்றனர் இந்த நிலையில் கராச்சியில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலவச கோதுமை பெற கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 9 பெண்களும் மற்றும் இன்னும் சில பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு உணவிற்காக 12 பேர் இறந்துள்ளனர் என்பது உலக மக்களிடையே பெரும் வேதனையை அளிக்கிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here