Home news நாட்டில் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் – RBI ன் எச்சரிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் – RBI ன் எச்சரிக்கை!

0
நாட்டில் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் – RBI ன் எச்சரிக்கை!
நாட்டில் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் - RBI ன் எச்சரிக்கை!
நாட்டில் அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் – RBI ன் எச்சரிக்கை!

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கள்ள நோட்டு புழக்கம்:

செப்டம்பர் 31ஆம் தேதியோடு நாட்டில் அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளின் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நாட்டில் அதிக மதிப்பு கொண்ட நோட்டாக இருந்து வருகிறது. இதனால் அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் கலந்து புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது 500 ரூபாய் நோட்டுகளின் உண்மை தன்மை குறித்து அறிந்து கொள்வதற்கான சில வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

ரூ.1000 உரிமைத்தொகை பயனர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் – வெளியான ஹாப்பி நியூஸ்!!

அதன்படி 63 மிமீ ,150 மிமீ என்ற அளவில் 500 ரூபாய் நோட்டுகள், ஸ்டோன் கிரே கலரில் சில புவியியல் குறியீடுகளுடன் இருக்கும். அதன் முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், பின்பக்கத்தில் செங்கோட்டையின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டில் 500 ரூபாய் என்ற குறிப்பு வாட்டர் மார்க் மற்றும் நோட்டின் மேல் இருந்து கீழ் புறம் பாதுகாப்பு ஸ்ட்ரிப் மாறும் வண்ணத்துடன் இருக்கும் இதனை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here