Home news உங்களது ஆதார் கார்டை மிஸ் யூஸ் செய்ய வாய்ப்பு – இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

உங்களது ஆதார் கார்டை மிஸ் யூஸ் செய்ய வாய்ப்பு – இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

0
உங்களது ஆதார் கார்டை மிஸ் யூஸ் செய்ய வாய்ப்பு – இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. இந்த ஆதார் எண்ணை நாம் மற்றவர்களுக்கு வழங்கும் போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பது பற்றிய முழு விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆதார் கார்டு:

ஆதார் எண் என்பது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரின் அடையாள அட்டை ஆக இந்தியாவில் மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஆதார் எண்ணை நாம்  பேங்க் அக்கவுண்ட், வாக்காளர் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அனைத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. அப்படிப்பட்ட ஆதார் எண்ணை நாம் ஒருவருக்கு வழங்கும் போது செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய அறிவுரைகளை இங்கு காணலாம்.

செய்யக்கூடியவை:

  • உங்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடிய நபர் அல்லது நிறுவனமும் அதற்கான காரணத்தையும் சம்மதத்தையும் உங்களிடம் இருந்து  பெற வேண்டும்.
  • ஆதார் எண்ணை பகிர்வதில் விருப்பமில்லை என்றால் ஒரு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையரை (Virtual Identifier – VID)  உருவாக்கி வழங்கக்கூடிய வசதி இதில் உள்ளது. ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த ஐடியை கொடுக்கலாம். அதன்பின் அதை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
  • UIDAI வெப்சைட் அல்லது m-Aadhaar அப்ளிகேஷனில் கடந்த ஆறு மாதங்களில் உங்களுடைய ஆதார் சம்மந்தப்பட்ட அனைத்து வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நம் ஆதார் சரியான வழியில் பயன்பட்டதா என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  • ஒவ்வொரு ஆதன்டிகேஷன் செயல்முறையும் யூஐடி இமெயில் மூலமாக உங்களுக்கு அனுப்பும் எனவே அனைவரும் தங்களது ஈமெயில் ஐடியை ஆதாரங்களுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆதார் எண் தவறான முறையில் உபயோகப்படுத்தப்பட்டதாக என நீங்கள் சந்தேகிக்கும் பொழுது 1947 என்ற  என்ற ஹெல்ப்லைனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். இது இலவச அழைப்பு அல்லது [email protected] என்ற ஈமெயில் ஐடியும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .

செய்யக்கூடாதவை:

  • உங்களுடைய PVC கார்டு/ ஆதார் லெட்டர் அல்லது அதன் நகலை எங்கேயும் தவறுதலாக வைத்து விட வேண்டாம்.
  • குறிப்பாக பொதுத்தளங்களில் உங்கள் ஆதாரை ஷேர் செய்யாதீர்கள். அதாவது சமூக வலைத்தளமான ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்கவும்.
  • எந்த ஒரு அதிகாரப்பூர்வமற்ற நிறுவனத்திடம் OTP யை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • கடைசியாக உங்களுடைய m-Aadhaar PIN -ஐ யாரிடமும் உதிர வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here