Home news X பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – ஆடியோ & வீடியோ கால் வசதி!!

X பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – ஆடியோ & வீடியோ கால் வசதி!!

0
X பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – ஆடியோ & வீடியோ கால் வசதி!!

ஆண்ட்ராய்டு பயனர்கள் X தளத்தின் மூலமாகவே ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் படியான புதிய அப்டேட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

X அப்டேட்:

முன்னர் ட்விட்டர் நிறுவனமாக அழைக்கப்பட்டு வந்த X நிறுவனம் எலான் மஸ்க்கின் பக்கம் மாறியதில் இருந்து பல்வேறு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. முன்னர் X நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு இணையாக வளர்ந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து வருகிறது. இதனால், X நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், Instagram, Whatsapp செயலியில் உள்ள அம்சங்களை போலவே X தளத்தில் உள்ள பயனர்களுக்கும் கூடுதல் அம்சத்தினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது X தளத்தின் மூலமாகவே ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும்படியான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த அடுத்த நாட்களில் எக்ஸ் தளத்தின் மூலமாகவே பணம் பரிமாற்றம் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here