Home news 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

0
10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்து கொள்ள ஜூன் 24ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்:

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்வு முடிந்து சில நாட்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை பெற்றுக்கொண்டனர். தேர்வு எழுதிய 9,14,320 பேரில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

இத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் ஜூன் 24ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 24 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here