Home news தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியமானது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு அவர் கடைசி மாதம் வாங்கும் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். அவர் இறந்த பிறகு அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த ஓய்வூதிய திட்டத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலனர் அரசு வேலைகளை தேர்வு செய்து வந்தனர்.

TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை & முழு விபரம் இதோ!

இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஓய்வூதியம் வழங்குவதால் ஏற்பட்ட நிதி சிக்கலை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை தவிர்த்து அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கும் விதமாக கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை பெரும்பாலான அரசு ஊழியர்கள் சுமார் 17 ஆண்டுகாலமாக எதிர்த்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து வல்லுநர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை கடந்த 2018ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Post Office தினசரி ரூ.50 சேமித்தால் ரூ.35.60 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அதிக லாபம் தரும் திட்டம்!

ஆனால் இது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய முறை செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஓய்வூதியம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது. அதில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here