Home Entertainment ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!

0
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்திருந்த விஜே தீபிகா தற்போது தனது சொந்த ஊரில் மாடுகளுக்கு பால் கறக்கும் வகையில் எடுத்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜே தீபிகா

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நடிகையாக அறிமுகமானவர் விஜே தீபிகா. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து முதல் சீரியலிலேயே அதிகளவு ரசிகர்களை சம்பாதித்திருந்தார் விஜே தீபிகா. இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகாவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட சமயத்தில் அவர் இத்தொடரில் இருந்து திடீரென விலக்கப்பட்டார்.

‘தமிழும் சரஸ்வதியும்’ நட்சத்திராவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் பதிவு!

அதனால் தீபிகாவை மிஸ் செய்து வந்த ரசிகர்களை சந்திக்கும் விதமாக தனியாக ஒரு யூடியூப் சேனலை துவங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சென்னையில் வசித்து வரும் விஜே தீபிகாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்லும் தீபிகா அவருடைய வீடு, தோட்டம் என அனைத்தையும் வீடியோவாக எடுத்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலிக்கு சென்றிருக்கும் விஜே தீபிகா தனது பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு பால் கறக்கும் வண்ணம் ஒரு வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஐஸ்வர்யாவை பால் கறக்கும் கோலத்தில் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் செய்துள்ள செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here