Home news நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அரசு தகவல்!

நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அரசு தகவல்!

0
நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அரசு தகவல்!
நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - அரசு தகவல்!
நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அரசு தகவல்!

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களில் 92%க்கும் அதிகமானோர் கோவிட்-19க்கு தடுப்பூசி போட்டுள்ளனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்த நிலையில் இருந்து வந்ததால் நடப்பு கல்வியாண்டில் ஆரம்பத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்து வருவதால் பலமாநிலங்களில் கல்வி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு உதவித்தொகை – நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள்!

அதன்படி, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர்களிடமிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் தடுப்பூசி நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், அக்டோபர் 22ம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1 பில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தற்காலிக காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பள்ளிகள் திறப்பு மற்றும் ஊழியர்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதன்படி, கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தடுப்பூசி நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாடு முழுவதும் 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மத்திய அரசு நடத்தும் நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்களிடையே 96% தடுப்பூசிகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களில் 86% பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் 8.5% வட்டி! பேலன்சை சரிபார்க்க எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசு, தில்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக், குஜராத், பஞ்சாப், நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் மட்டும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here