தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

0
தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் - மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!
தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் - மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!
தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கும் நிலையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முகாம் அறிவிப்பு

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டம் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்த 70 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மதம் ரூ. 7700 முதல் ரூ 10000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961ன் படி இந்நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முகாம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பேட்டை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04622342432/ 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!