Zomato இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீர் பதவி விலகல் – நிறுவனம் அறிவிப்பு!

0
Zomato இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீர் பதவி விலகல் - நிறுவனம் அறிவிப்பு!
Zomato இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீர் பதவி விலகல் - நிறுவனம் அறிவிப்பு!
Zomato இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீர் பதவி விலகல் – நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Zomato புட் டெலிவரி நிறுவனத்தின் இணை நிறுவனராக பதவி வகித்து வந்த கவுரவ் குப்தா, தற்போது உணவு தொழில்நுட்ப தளத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சோமாட்டோ நிறுவனர்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மற்றும் இணையதள சேவையுடன் பல வகையான செயல்பாடுகள் தற்போது எளிதாகிவிட்டது. அதில் குறிப்பாக டோர் டெலிவரி சேவைக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் காணப்படுகிறது. அந்த வகையில் வீட்டு விநியோக பிரிவில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் சோமாட்டோ நிறுவனம், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் அமைந்துள்ள சோமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பதவியை கவுரவ் குப்தா என்பவர் வகித்து வந்தார். கடந்த 2015 ஆண்டு சோமாட்டோ நிறுவனத்துடன் இணைந்த குப்தா, தனது திறமை மூலம் 2018 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாகவும், 2019 ஆம் ஆண்டில் நிறுவனராகவும் உயர்த்தப்பட்டார். கடந்த 6 வருடங்களாக தனது பங்களிப்பை அந்நிறுவனத்துக்கு கொடுத்து வந்த கவுரவ் குப்தா, உணவு தொழில்நுட்ப தளத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ பதிவில் தெரிவித்துள்ளது.

இப்போது சோமாட்டோவில் இருந்து விலக இருக்கும் அவர், ‘நான் என் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை எடுக்க இருக்கிறேன். அதாவது அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். கடந்த 6 வருடங்களாக சோமாட்டோவுடனான எனது பயணத்தில் இருந்து ஒரு மாற்றுப் பாதையை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை எழுதும் போது நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். அதை வார்த்தையால் கூற முடியாது’ என உருக்கமான பதிவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

குப்தா சோமாட்டோ நிறுவனத்தின் சார்பு, விளம்பரம், விற்பனை மற்றும் அட்டவணை முன்பதிவு போன்ற பல வணிகங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. IIT டெல்லியில் பொறியியல் பட்டமும், IIM கொல்கத்தாவில் MBA பட்டமும் பெற்றுள்ள இவர் தனது ஆரம்பகால கட்டங்களில், AD கியர்னி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துள்ளார். சோமாட்டோ நிறுவனத்துக்கு குப்தா அளித்த பங்களிப்பு மூலம் அந்நிறுவனம், மளிகை விநியோக தளமான க்ரோஃபர்ஸில் சிறுபான்மை பங்குகளை பெறுவதற்காக சுமார் ரூ.745 கோடிகளை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!