Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!

0
Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!
Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!
Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனமான Zoho, 2022ம் ஆண்டிற்குள் பட்டப்படிப்பு முடித்திருக்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்றின் வீழ்ச்சிக்கு பிற்பாடு, அனைத்து வகையான தொழித்துறை நிறுவனங்களும் வேலை மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையை முன்னெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைய அடிப்படையிலான வணிகக் கருவிகளை உருவாக்கும் ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho தற்போது பட்டதாரி இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கொடுத்துள்ளது.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – UMANG செயலியில் இருந்து பணத்தை பெறும் முறை!

இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் https://careers.zohocorp.com/forms/fcc89b5ebd373d598e0224d10f2199d12a89cdb001c479252ba774a9adbcd89b என்ற இணைப்பின் கீழ் தங்களது விண்ணப்ப படிவங்களை சமர்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது படிவங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 8 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது Zoho நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் ஆகியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி:

மென்பொருள் உருவாக்குநர்

அனுபவம்:

0 முதல் 5 ஆண்டுகள் வரை

பட்டப்படிப்பு ஆண்டு:

2022 வரை

வேலை விவரம்:
  • மிஷன்-கிரிட்டிகல் சிஸ்டங்களுக்கான அதிக அளவு, குறைந்த தாமத பயன்பாடுகளை வடிவமைத்து உருவாக்குதல் மற்றும் செயல்திறனை வழங்குதல்.
  • தயாரிப்பு வளர்ச்சி மற்றும் வாழ்க்கை சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் பங்களிப்பது.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட, சோதிக்கக்கூடிய மற்றும் திறமையான குறியீட்டை எழுதுவது.
  • வடிவமைப்புகள் விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல்.
  • மென்பொருள் கூறுகளின் வெளியீடுகளை தயாரிப்பது.
  • மாற்று மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வதன் மூலமும், கட்டடக்கலை மறுஆய்வுக்கு இவற்றை வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பது.
தேர்வு தேதிகள் மற்றும் இடங்கள்:
  • டிசம்பர் 11: சென்னை
  • டிசம்பர் 12: சென்னை
  • டிசம்பர் 18: கோயம்புத்தூர் அல்லது தென்காசி
  • டிசம்பர் 19: சென்னை
குறிப்பு:

விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 8 ஆகும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!