கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் – 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!

0
கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் - 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!
கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் - 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் - 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!
கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் – 67 வயதுள்ள நபருக்கு பாதிப்பு உறுதி! தடுப்பு பணிகள் தீவிரம்!

கொசுக்களால் பரவும் ஜிகா என்னும் வைரஸ் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவருக்கு தற்போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ்:

இந்தியா முழுவதும் மக்கள் கொரோனா தொற்று, குரங்கு அம்மை, பருவ கால நோய்கள் ஆகியவற்றுடன் போராடி வரும் நிலையில் தற்போது கொசுக்களால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் தான் இந்த ஜிகா வைரசும் பரவுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் இந்த வைரஸ் அதிகம் பரவுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

உடல் வலி, தசை வலி, தலை வலி, முதுகு வலி, சோர்வு, கண் சிவந்தல் போன்றவை இந்த ஜிகா வைரஸின் அறிகுறிகள் ஆகும். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் தற்போது ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

டிச.3 ( நாளை) அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை – தேர்தல் எதிரொலி!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள நபர் இருந்த பகுதி முழுவதும் மக்களுக்கு பரிசோதனைகளும் செய்து வருகின்றனர். இந்த பரிசோதனையின் போது 4 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நோய் தாக்குதல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரஸிடம் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் அதில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!