
புதிதாக தொடங்கப்பட்ட ஜீ தமிழ் டாப் சீரியலில் வந்த மாற்றம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! வெளியான அப்டேட்!
ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட “கார்த்திகை தீபம்” சீரியலில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்த அப்டேட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
சீரியல் அப்டேட்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியல்கள் முன்னணி சேனல் சீரியல்களுடன் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்று பெரிய மாற்றம் ஒன்று நடந்தது. அதாவது ஐஸ்வர்யா அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வந்தனா சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக சுபா ரக்ஷா நடிக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து பெரிய மாற்றம் ஒன்று வர இருக்கிறது.
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைகள் – தொடரும் போட்டா போட்டி!
அதாவது கார்த்திகை தீபம் சீரியலின் இயக்குனர் சதாசிவம், அவர் ஏற்கனவே ஜீ தமிழில் மாரி சீரியலை இயக்கி வருகிறார். இந்த இரண்டு சீரியல்களும் டாப் சீரியல்களாக இருக்கின்றன. அந்த வகையில் இவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாகவும், அவருக்கு பதிலாக இயக்குனர் கார்த்திக் இனி கார்த்திகை தீபம் சீரியலின் இயக்குனராக களமிறங்க இருக்கிறார். இவரும் சதாசிவம் அவர்களுடன் பணிபுரிந்தவர். இந்த புதிய மாற்றத்தால் கதையில் பல திருப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download