ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு சீரியல்களை சில காரணங்களால் நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஜீ தமிழ் சீரியல்கள்

மக்கள் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். இதனால் அனைத்து சேனல்களும் பல வித கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அனைத்து சீரியல்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் ஜீ தமிழ் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த ட்விஸ்ட் – ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!

பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ‘சத்யா’ இந்த சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் வித்தியாசமாக கதைக்களத்துடன் கூடிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆயிஷாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், சில காரணங்கள் காரணமாக இந்த சீரியல் நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா – பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!

அதே போல் இந்த சீரியல் மட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலும் நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல்களின் கடைசி எபிசோட் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி ஒளிபரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் இந்த சீரியல்கள் நிறுத்தப்படுவதற்கான காரணங்களும் கூறப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here