‘அடிப்பிரதட்சணம் செய்யும் அகிலா, கண்முழித்த பார்வதி’ – விறுவிறுப்படையும் செம்பருத்தி!

0
'அடிப்பிரதட்சணம் செய்யும் அகிலா, கண்முழித்த பார்வதி' - விறுவிறுப்படையும் செம்பருத்தி!
'அடிப்பிரதட்சணம் செய்யும் அகிலா, கண்முழித்த பார்வதி' - விறுவிறுப்படையும் செம்பருத்தி!
‘அடிப்பிரதட்சணம் செய்யும் அகிலா, கண்முழித்த பார்வதி’ – விறுவிறுப்படையும் செம்பருத்தி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இதில் முதலாளி மீதான விசுவாசத்தை மையக்கருத்தாக கொண்டு கதை நகர்கிறது. தன்னுடைய முதலாளியும், மாமியாருமான அகிலாவுக்காக உயிரை பணயம் வைத்து உள்ளார் பார்வதி. மேலும் பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடிய பார்வதிக்காக அகிலா பிரார்த்தனை செய்து அவரை காப்பாற்றி உள்ளார்.

செம்பருத்தி சீரியலில் கதாநாயகி பார்வதி, அகிலாவிற்காக பரம்பரை வாலை காப்பாற்ற முயலும் போது நந்தியின் சூழ்ச்சியால் பாம்பிடம் கடிபட்டு உயிருக்கு போராடி வருகிறார். இதற்கு காரணமான நந்தினி வீட்டிற்கு துப்பாக்கியுடன் அகிலா மிகுந்த கோபத்துடன் செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோட்டில் நந்தினியை கொல்ல முயற்சிக்கும் அகிலாவை ஆதி தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு கோவிலுக்கு செல்லும் அகிலா கடவுளிடம் மனமுருகி வேண்டுகிறாள்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் – ரசிகர்கள் சோகம்!

அதாவது, “எனக்காக பார்வதி தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து விட்டாள். பார்வதியை எப்படியாவது காப்பாற்றி விடு” என வேண்டி அடிப்பிரதட்சணம் செய்கிறார். இந்நிலையில் அகிலா இல்லாமல் ஆதி மட்டும் வருவதை கண்ட வனஜா அங்கு, நந்தினி கொலை செய்யப்ட்டிருப்பாள் அல்லது அகிலா கொலை செய்யப்ட்டிருப்பாள் எதோ ஒன்று நடந்துள்ளது, எதுவாக இருந்தாலும் நல்லது என நினைத்து கொண்டே நந்தினிக்கு போன் செய்கிறார்.

அப்பொழுது நந்தினி ஆதி மற்றும் அகிலா தனக்கு உயிர் பிச்சை கொடுத்தது மற்றும் நடந்ததை கூற, மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார் வனஜா. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த பார்வதி கண் விழிக்க, அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம். ஆனால் அவர் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது. மேலும் மிகுந்த கோவத்தில் உள்ள நந்தினி அடுத்து என்ன பிளான் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here