ஜீ தமிழில் களம் இறங்கும் நட்சத்திர பட்டாளம் .. அதிரடியாக தொடங்கும் புதிய சீரியல்!

0
ஜீ தமிழில் களம் இறங்கும் நட்சத்திர பட்டாளம் .. அதிரடியாக தொடங்கும் புதிய சீரியல்!
ஜீ தமிழில் களம் இறங்கும் நட்சத்திர பட்டாளம் .. அதிரடியாக தொடங்கும் புதிய சீரியல்!
ஜீ தமிழில் களம் இறங்கும் நட்சத்திர பட்டாளம் .. அதிரடியாக தொடங்கும் புதிய சீரியல்!

ஜீ தமிழ் சேனலில் அடுத்தடுத்து பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது நட்சத்திர பட்டாளம் ஒன்று சேர்ந்து நடிக்கும் புதிய சீரியல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்:

மற்ற முன்னணி தொலைக்காட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜீ தமிழ் சேனலும் புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது ஜீ தமிழ் சேரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மதிய நேரத்தில் ஒரு புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்திரா என்ற பெயர் கொண்ட இந்த சீரியலில் ரெட்டை ரோஜா ஹீரோ அக்ஷய் கமல் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

கோபி செய்யும் டார்ச்சர்.. ஜெயிலுக்கு சென்றாலும் பரவாயில்லை என எழில் எடுத்த முடிவு!

Exams Daily Mobile App Download

ஹீரோயினாக இதுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஃபௌசி நடிக்க உள்ளார். இவர் கோகுலத்தில் சீதை சீரியலில் இதற்கு முன்னதாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர மற்றொரு ஜோடியும் இந்த சீரியலில் உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மெர்வின் மற்றும் சீரியல் நடிகை அக்ஷயா நடிக்க இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இவர்களை தவிர எதிர்நீச்சல் நாச்சியப்பன், பிரேமி வெங்கட், அகிலா கிருஷ்ணன், டேவிட் போன்ற பலரும் இந்திரா சீரியலில் நடிக்க உள்ளனர். இந்த நட்சத்திர பட்டாளத்தை பார்த்தவுடன் சீரியலுக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!