விஜய் டிவிக்கு டாடா காட்டி ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை – ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவிக்கு டாடா காட்டி ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை - ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவிக்கு டாடா காட்டி ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை - ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவிக்கு டாடா காட்டி ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை – ஷாக்கான ரசிகர்கள்!

ஜீ தமிழில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் “கார்த்திகை தீபம்” சீரியல் குறித்த அப்டேட் தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான நடிகை ஒருவர் அந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கார்த்திகை தீபம் சீரியல்:

சின்னத்திரையில் நடிகர் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அலட்டல் இல்லாமல் அவருடைய எதார்த்தமான நடிப்பை பார்க்க ஒரு காலத்தில் பலர் தவம் இருந்தனர். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்கு பின் அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் ஜீ தமிழில் மீண்டும் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அன்றைய தினம் முதல் கார்த்திகை தீபம் சீரியல் குறித்த அப்டேட் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியல் நேரம் குறித்த அதிகாரபூர்வ ப்ரோமோ சேனல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க இருக்கும் சக நடிகர்கள் குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.

பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும் “கார்த்திகை தீபம்” சீரியல் ப்ரோமோ – நேரம் இதுவா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

மேலும் ரெட்டை ரோஜா சீரியலில் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லிமிஷ் நடிக்க இருக்கிறார். மேலும் நடிகை வந்தனாவும் நடிக்க இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக நீ தானே என் பொன் வசந்தம் மற்றும் புது புது அர்த்தங்கள் சீரியல்களில் நடித்து இருந்தார். மேலும் இந்த சீரியலில் நட்சத்திர பட்டாளமே நடிக்க இருப்பதால், எப்போது இந்த சீரியல் தொடங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!