மீண்டும் பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் வெற்றி நாயகன் – அதுவும் இந்த சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

0
மீண்டும் பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் வெற்றி நாயகன் - அதுவும் இந்த சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் வெற்றி நாயகன் - அதுவும் இந்த சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் வெற்றி நாயகன் – அதுவும் இந்த சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

ஜீ தமிழில் பல வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் தான் தினேஷ். 4 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து அவர் இடைவெளி எடுத்து இருந்த நிலையில், அவர் மீண்டும் ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் தினேஷ்:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் டாப் ஐந்து இடங்களில் இருந்தவர் நடிகர் தினேஷ். அவர் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்தார். அந்த சீரியல் முடிந்த பின் நடிப்பில் அவர் இடைவெளி எடுத்து இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியலில் சிறப்பு ரோலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் ஜீ தமிழில் மக்களின் எதிர்பார்ப்பை பெற்ற கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

ஏற்கனவே இந்த சீரியலில் 2 நடிகர்கள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வந்தது, அதாவது லீட் ரோலில் கார்த்திக் ராஜ், நடிகர் தினேஷ் மற்றும் நடிகர் நந்தா ஆகியோர் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதில் நடிகர் தினேஷ் மற்றும் நந்தா இருவரில் ஒருவர் சிறப்பு ரோலில் நடிக்க இருப்பதாகவும், மற்றொருவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பார் என்ற தகவல் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் தினேஷ் இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தற்போது அவரே பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Emotional-ஆக நடந்த சன் டிவி செவ்வந்தி சீரியல் நாயகியின் வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் மக்களின் அதிகமான வரவேற்பை பெற்றுள்ள கார்த்திகை தீபம் சீரியல், டிசம்பர் 5 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக, அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. எனவே சீரியல் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!