இனி என்னால தொடர முடியாது.. “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியை விட்டு விலகிய போட்டியாளர் – ஷாக்கிங் காரணம்!

0
இனி என்னால தொடர முடியாது..
இனி என்னால தொடர முடியாது.. "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியை விட்டு விலகிய போட்டியாளர் - ஷாக்கிங் காரணம்!
இனி என்னால தொடர முடியாது.. “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியை விட்டு விலகிய போட்டியாளர் – ஷாக்கிங் காரணம்!

ஜீ தமிழில் சிறந்த நடன போட்டியாளரை தேர்வு செய்யும் ரியாலிட்டி நிகழ்ச்சியான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள, நடிகை மைனாவின் கணவர் யோகி கையில் காயம் ஏற்பட்டது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் யோகி:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நடன திறமையை வெளியே கொண்டு வர தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சங்கீதா, சினேகா ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது அரை இறுதி சுற்றை நெருங்கிவிட்டது.அதில் ஒரு போட்டியாளர்களில் ஒருவராக நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் கலந்து கொள்கிறார்.

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

Exams Daily Mobile App Download

அவருக்கு ஜோடியாக சஹானா ஆடுகிறார். இந்நிலையில் நடன பயிற்சியின் போது யோகிக்கு பயங்கரமாக அடிபட்டுவிட்டது. அதனால் அவரால் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் அரை இறுதியில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தப்பட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவருடைய மனைவி மைனா நந்தினி தற்போது விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டு வரும் நிலையில் யோகிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் யோகி இனி இந்த நிகழ்ச்சியில் தொடரமாட்டேன் எனவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!