ஜீ தமிழ் நடிகை ஷபானா & ரேஷ்மாவின் ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் – வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!

0
ஜீ தமிழ் நடிகை ஷபானா & ரேஷ்மாவின் ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
ஜீ தமிழ் நடிகை ஷபானா & ரேஷ்மாவின் ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
ஜீ தமிழ் நடிகை ஷபானா & ரேஷ்மாவின் ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் – வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!

திருமணத்திற்கு பின்பும் கூட தங்களது ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும், சமீபத்திய டே அவுட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகின்றனர்.

நடிகை ஷபானா

பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் எப்போதும் போட்டி, பொறாமைகள் காணப்படும் என்பது பலரும் சொல்லக்கூடிய ஒரு முக்கிய விஷயமாகும். இந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளான ஷபானா, ரேஷ்மா, சைத்ரா, நக்ஷத்ரா ஆகியோர். இவர்கள் நால்வரும் நெருங்கிய உயிர்த் தோழிகள் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

தமிழகம் வந்த சிங்கப்பூர் பயணிக்கு ஓமைக்ரான் தொற்று? அச்சத்தில் மக்கள்!!

எப்போதும் ஒன்றாக சுற்றித் திரியும் இவர்களை பார்க்கும் போது சாதாரணமாக தெரிந்தாலும், இவர்களது ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் பலரையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த நண்பர்கள் குழுவில் உள்ள மூவருக்கு அதாவது நடிகை சைத்ரா, ஷபானா, ரேஷ்மா ஆகியோருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் இவர்களின் நட்பு ஒரு பிரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அது தவறான எண்ணம் என்பதை நிரூபித்துள்ளது நடிகை ரேஷ்மா மற்றும் ஷபானாவின் சமீபத்திய சந்திப்பு.

அந்த வகையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் திருமணத்திற்கு ஜோடியாக சென்ற ரேஷ்மா மற்றும் மதன் இருவரும், முன்னாள் நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். அதே போல தான் நடிகை ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்திற்கும் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் ஜோடியாக வந்து விழாவை சிறப்பித்திருந்தனர். அதுவும் நடிகை ரேஷ்மாவுக்கு நடிகர் மதன் தாலி கட்டும் சமயத்தில் நடிகை ஷபனாவின் கண்கள் கலங்கினது பார்ப்பவர்களை கவர்ந்திருந்தது.

TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

இப்படி திருமணத்தின் போதும் கூட, பிரியாது இருந்து வந்த நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை ஷபானா இருவரும் சமீபத்தில் தங்களது கணவர்களுடன் ஒரு டே அவுட் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட ரேஷ்மா மற்றும் ஷபானாவின் ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸை பார்த்து ரசிகர்கள் சற்று வியந்து போயுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!