முதன்முறையாக தனது காதல் குறித்து மனம் திறந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை – ஆனந்தத்தில் பிரபல நடிகர்!

0
முதன்முறையாக தனது காதல் குறித்து மனம் திறந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை - ஆனந்தத்தில் பிரபல நடிகர்!
முதன்முறையாக தனது காதல் குறித்து மனம் திறந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை – ஆனந்தத்தில் பிரபல நடிகர்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா. அவர் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய காதலர் குறித்து நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

நடிகை காதல்:

சின்னத்திரையில் நடிப்பவர்கள் பலர் காதல் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜீ தமிழில் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஆயிஷா. இந்நிலையில் சத்யா சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் விஷ்ணு உடன், அவருக்கு காதல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. சீரியல் தொடக்கத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை – பாரதியின் அடுத்த முடிவு!

ஆனால் அதன் பின் இருவரும் சரியாக பேசிக் கொள்ளாமல் இருந்ததாக செய்திகள் பரவ தொடங்கியது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கிறார். நேற்றைய எபிசோடில் அவர் தனது சக போட்டியாளரிடம், தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அவருடைய பெயர் யோகேஷ் எனவும், அவர் ஒரு பிசினஸ் மேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களின் காதலுக்கு ஆயிஷா வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஆனால் யோகேஷ் வீட்டில் ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த எபிசோடுகள் டிவியில் காட்டப்படாமல் ஹாட்ஸ்டாரில் நேரலையில் காட்டப்பட்டது. அதை பார்த்த சத்யா சீரியல் ஹீரோ விஷ்ணு தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நீண்ட நாட்களுக்கு பின் உண்மை வெளியே தெரிந்துள்ளது என சந்தோசமாக பதிவிட்டு அதில் பிக்பாஸ் சீசன் 6 என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலர்கள் இல்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!