சாகிர் உசேன் பிறந்த நாள் (3வது இந்தியக் குடியரசுத் தலைவர்)

0

சாகிர் உசேன் பிறந்த நாள் (3வது இந்தியக் குடியரசுத் தலைவர்)

  • சாகிர் உசேன் 8 பி ப்ரவரி 1897 – 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
  • 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார்.
  • 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
  • இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார்.
  • ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார் . 
  • உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார்.
  • அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்

விருதுகள் :

  • கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது.
  • 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!