இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்!

0
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு - வைரலாகும் புகைப்படம்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு - வைரலாகும் புகைப்படம்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான நடிகர் விஜய் மற்றும் இசை அமைப்பாளர் யுவன் இருவரும் நேரில் சந்தித்துள்ள தகவல் மற்றும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்கள் இது குறித்து பல யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

நேரில் சந்திப்பு:

தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களின் முன்னனி வரிசையில் இருப்பவர் யுவன். இவரின் தனித்துவமான இசை மற்றும் மயக்கும் குரலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில தனிப்பட்ட காரணங்களுக்காக யுவன் சில காலம் சினிமா துறையிலிருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் இடைவெளி முடிந்து அவர் மீண்டும் வரும் போது அவரின் இசையில் எப்போதும் இருக்கும் ஒரு புத்துணர்வு சற்று அதிக அளவில் இருப்பதாக யுவனின் ரசிகர்கள் உணர்ந்தார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் பலருக்கும் யுவன் இசை அமைத்துள்ளார். யுவனின் இசை என்றாலே அந்த படம் ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு படத்தின் இசையில் அதிக கவனத்தை செலுத்தி வருவார்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் புதிய லுக் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான வலிமை படத்தில் யுவன் இசையில் ஒவ்வொரு பாடலாக வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. நடிகர் அஜித் மற்றும் யுவனின் கூட்டணியில் இதுவரை வெளியான பில்லா மற்றும் மங்காத்தா போன்ற படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். இதேபோல், நடிகர் விஜய் மற்றும் யுவனின் கூட்டணி குறித்து ரசிகர்கள் பல வருடங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதன் முதலில் யுவன் இசையில் நடிகர் விஜய் வேலை படத்தில் காலத்துக்கேத்த கானா என்ற பாடலை பாடியுள்ளார். அதன்பிறகு, விஜய்யின் திய கீதை படத்தில் யுவன் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பிரபலமடைந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை – 2021 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!

அதன் பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் எந்த படமும் வெளியவில்லை. ஆனால் அனிரூத் இசையில் விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் யுவன் விஜய்க்காக அந்த கண்ணா பார்த்தாக்கா என்ற பாடலை பாடி உள்ளார்.அது மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. இதனால் இவர்களின் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்தது. தற்போது யுவன் நடிகர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து உள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று தான் கூறியுள்ளனர். ஆனால் இவர்களின் ரசிகர்கள் புதிய படத்தில் இவர்கள் இணைய வாய்ப்புள்ளதாகவும், அதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்று, அதற்கான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!