இசை உலக நாயகன் யுவன் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி – கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்!

0
இசை உலக நாயகன் யுவன் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி - கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்!
இசை உலக நாயகன் யுவன் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி - கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்!
இசை உலக நாயகன் யுவன் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி – கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்!

இசையுலகின் நாயகன் யுவனுக்கு இன்று 42வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சர்ப்ரைஸ் பார்ட்டி:

தமிழகத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது பாடலுக்கு இளைஞர்கள் அடிமை என்று சொன்னால் மிகையாகாது. இன்றைய தினத்தில் அனைவரும் WhatsApp Status ல் ஹேப்பி பர்த்டே யுவன் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தெரியாமல் பிரைவேட் டெரஸ்ல டின்னர் போலாம் என சொல்லி மெட்ராஸ் ஹவுஸுக்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார் அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா.

தள்ளி போன பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியாவின் பேராசிரியர் வழங்கிய அட்வைஸ் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி ஹீரோக்கள் பலரின் வெற்றிக்கு யுவனின் இசை முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து மொட்டை மாடி மியூசிக் பத்ரியின் பேண்டு யுவனின் பாடல்களை வாசித்து விழாவினை சிறப்பித்தது. பார்ட்டிக்கு முதல் ஆளாக வந்த சிம்பு “லூசு பெண்ணே லூசு பெண்ணே” பாடலை பாடி அசத்தியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவி மீனாட்சி மற்றும் மகள் தீ, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தரண் குமார் ஆகியோர் வந்திருந்தார்.

மேலும் இதில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், அமீர், ராம், அஹ்மத், இளன், பிரதீப், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, சுரேஷ் காமாட்சி, சிவி குமார், சுதன் ஆகியோரும் கதாநாயகர்களில் ஆர்யா, அசோக் செல்வன், வைபவ், மெட்ரோ சிரிஷ், கதாநாயகிகளில் சுனைனா, ரைசா வில்சன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ‘King YuVan’ என்று ”நீ சிரிக்கின்ற போதிலும், நீ அழுகின்ற போதிலும் உன் வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்… I WILL BE THERE FOR YOU… I WILL BE THERE FOR YOU” என்றொரு பாடலையும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தார் அறிவு.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, கார்த்திக் ராஜா பவதாரணி, பாஸ்கர் கேக் கட்டிங்கில் கலந்து சிறப்பித்ததோடு மிர்ச்சி சிவா யுவன் – கார்த்திக் ராஜா பற்றி கூறிய கதை ஹலைட் ஆக மாறியது. இறுதியில் கலந்து கொண்ட தனுஷ் “ரவுடி பேபி” பாடலை பாடி விழாவினை சிறப்பித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!