
இளைஞர்கள் பணத்தை சேமிக்க அருமையான திட்டம்…!! ” இதில், உங்கள் “Pocket Money”-யை முதலீடு செய்தால் போதும், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்”..!!
கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேமிக்கும் மக்கள் அனைவரின் எண்ணத்திலும் தோன்றுவது, குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை வழங்கும் திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே. அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், போஸ்ட் ஆபிஸின் நிலையான வைப்புத் திட்டம்(Fixed Deposit), முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கும் திட்டமாக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1000 முதலீடு செய்தால் , அடுத்த 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளில் எவ்வளவு லாபத்தை ஈட்டலாம்? வட்டி சதவிகிதம் எவ்வளவு” ? என்ற அனைத்து கேள்விகளுக்கும் கீழே விரிவாக பதிலளித்துள்ளோம்.
நிலையான வைப்புத் திட்டத்தில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இணையலாம். இத்திட்டமானது 1 முதல் அல்லது 5 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்தை வழங்குகிறது. மேலும், இதில் குறைந்தபட்சம் ரூ.1000 தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். அதுமட்டுமின்றி, இதில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய போகிறீர்கள் என்பதை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். மேலும், இதில் 1 ஆண்டிற்கு முதலீடு செய்பவர்களுக்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது. அதே 2 ஆண்டுகளுக்கு 7% வட்டி, 3 ஆண்டுகளுக்கு 7% வட்டி மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், இதில், நீங்கள் 4 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
உதாரணமாக, இப்போது நீங்கள் 5 ஆண்டு கால முதிர்வு காலத்தை தேர்ந்தெடுத்து ரூ.4 லட்சத்தை FD திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், முதிர்வு காலத்தில் ரூ.1,79,979 (7.5%) வட்டி வருமானத்தை சேர்த்து மொத்த தொகையாக உங்களுக்கு ரூ.5,79,979 கிடைக்கும்.

























