Phone pay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட் – பயனர்கள் ஹாப்பி!!
Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளும்படியான வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்:
உலகின் முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனமான Phonepay நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கி வருகிறது. Phonepay மூலமாகவே மொபைல் ரீசார்ஜ், பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் என ஏகப்பட்ட வேலைகளை செய்து முடிக்கலாம். மேலும், Phonepay சேவைகளுக்கு தகுந்தவாறு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!
இந்நிலையில், Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெரும்படியாக இருந்தது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் Phonepay மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். ஒரு முன்பதிவில் அதிகபட்சமாக 6 டிக்கெட்கள் வரையில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பயனர்களுக்கு 20% வரைக்கும் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.