YIL அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023 – 5458 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
YIL அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023 - 5458 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
YIL அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023 – 5458 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

Yantra India Limited (YIL) ஆனது இந்திய ஆயுத தொழிற்சாலைகளில் வர்த்தகப் பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 5458 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் விவரங்களை தெரிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Yantra India Limited (YIL)
பணியின் பெயர் Trade Apprentices
பணியிடங்கள் 5458
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
YIL காலிப்பணியிடங்கள்:
  • Non-ITI category – 1944 பணியிடங்கள்
  • Ex-ITI category – 3514 பணியிடங்கள்
Non-ITI category கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB Financial வேலைவாய்ப்பு 2023 – Zonal Relationship Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Ex-ITI category கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்தினாலும் தொடர்புடைய வர்த்தக தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உயர் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.yantraindia.co.in/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!