அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேலும் சில இடங்களில் லேசான முதல் மிதமான கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும், மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், கட்டாக், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் பத்ரக், பௌத், நாயகர், குர்தா, ராயகடா, கோராபுட், மல்கன்கிரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு – CEO வெளியிட்ட செயல்முறை!

இதனை தொடர்ந்து கஜபதி, ராயகடா, கலாஹண்டி, நபரங்பூர், கோராபுட் மற்றும் மல்கங்கிரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுந்தர்கர், ஜார்சுகுடா, பர்கார், சம்பல்பூர், தியோகர் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள யமுனாநகர், மொராதாபாத், அம்ரோஹா, நரோரா, சந்தௌசி, சம்பல், சஹாஸ்வான், கஸ்கஞ்ச் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், ஹிசார், ஜிந்த், நர்வானா, கைதால், கோஹானா, கர்னால், பானிபட், ரோஹ்தக், பிவானி, சஹாஸ்வான் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!