கேரளாவில் உள்ள 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!!
அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மற்றும் நாளை தீவிரமாக மழை பெய்ய இருப்பதால் அங்கு 16 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை:
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு எப்போதும் பெய்யும் மழையின் அளவு பதிவாகவில்லை. இப்படியான சூழலில், இன்று முதல் அங்கு பருவமழை வேகமெடுக்கும் என்று திருவனந்தபுர வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மஹாராஷ்டிரா அரசு உத்தரவு!
இன்று கேரளாவில் உள்ள கோழிக்கோடு, இடுக்கி, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நாளை கேரளாவில் உள்ள காசர்கோடு, எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, கண்ணூர் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் பல மழை பெய்யு என்ற காரணத்தால் மேற்கூறிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மீனவர்கள் இரு நாட்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.