11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!

0
11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்!
11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்!
11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த காற்று 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 12ம் தேதி வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை அதிகமாக உள்ளது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!

இந்த மழையின் காரணமாக கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் தண்ணீர் நிறைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 13ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அந்த 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நிலச்சரிவு, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here