ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் முடியப் போகிறதா? வில்லியின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

0
ஜீ தமிழ் 'யாரடி நீ மோகினி' சீரியல் முடியப் போகிறதா? வில்லியின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
ஜீ தமிழ் 'யாரடி நீ மோகினி' சீரியல் முடியப் போகிறதா? வில்லியின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் முடியப் போகிறதா? வில்லியின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “யாரடி நீ மோஹினி” சீரியல் முடிய போகிறது என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“யாரடி நீ மோஹினி” சீரியல்

ஜீ தமிழ் டிவி கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “யாரடி நீ மோஹினி” இந்த சீரியல் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பிரபலம். ஆரம்பித்த சில நாட்களில் இது பேய் சீரியல் என்று தான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அதன் பிறகு பல ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் இந்த சீரியல் வேறு ஒரு கதையம்சத்துடன் ஒளிபரப்பாகியது.

தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு? வெளியான தகவல்!

இந்த சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அழகான அதே சமயம் டெரர்ரான வில்லியாக நடித்து வந்த நடிகை சைத்ராவை அனைவருக்குமே பிடிக்கும். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த “யாரடி நீ மோஹினி” சீரியலில் முக்கியமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

இப்படியாக இருக்க, இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் “இனி உங்கள் அனைவரையும் மிஸ் செய்வேன்” என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் இந்த சீரியல் முடிவடைய போகிறதா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் அடுத்து வரும் பாகம் வேறு விதமாக இருக்குமா? அல்லது இதே கதையின் தொடர்ச்சியாக இருக்குமா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here