ஜியோமி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்தி – MI பிராண்ட் பெயர் நீக்கம்!

0
ஜியோமி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்தி - MI பிராண்ட் பெயர் நீக்கம்!
ஜியோமி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்தி - MI பிராண்ட் பெயர் நீக்கம்!
ஜியோமி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்தி – MI பிராண்ட் பெயர் நீக்கம்!

ஜியோமி நிறுவனம் தனது தயாரிப்பின் முன்னணி பிராண்டிங் பெயரான ‘MI’ ஐ மாற்றுவதாகவும், அதற்கு பதிலாக தனது தயாரிப்புகளை ஜியோமி என்ற பெயரில் வெளியிட இருப்பதாகவும் சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பெயர் மாற்றம்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உலக சந்தையில் ஸ்மார்ட் போன்கள், டிவி, டேப்லெட் போன்ற சாதனங்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான ஜியோமி தனது பிராண்ட் பெயரை மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதாவது கடந்த 12 ஆண்டுகளாக மின்னணு சாதன விநியோகத்தை மேற்கொண்டு வரும் ஜியோமி, தனது பிராண்ட்டுகள் அனைத்திற்கும் MI எனும் பெயரை மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஸ்மார்ட் போன் சந்தையில் MI எனும் பெயர் இன்றும் நிலைத்திருக்கும் நிலையில் அதனை மாற்றி ஒரு புதிய துவக்கத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி பாடம் – பள்ளிக் கல்வித்துறை!

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் MI பெயரில் வெளிவந்த ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் கடந்த 10 ஆண்டு காலத்தில் மின்னணு சாதன துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த நிறுவனம் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ஸ்மார்ட் போன் விற்பனையில் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ள ஜியோமி, இனி வரும் காலங்களில் தனது MI பிராண்ட் பெயரை பயன்படுத்தாது.

அதனை உறுதி செய்யும் வகையில் சீனாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜியோமியின் தயாரிப்பான மிக்ஸ் 4 ஸ்மார்ட் போன் MI என்று சந்தைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜியோமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த மாற்றம் நமது உலகளாவிய பிராண்ட் இருப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைக்கு வர சிறிது நேரம் ஆகலாம்.

TN Job “FB  Group” Join Now

மேலும் புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜியோமி தயாரிப்புகள் தொழில்நுட்பத்தின் உச்சத்தை அடைய முடியும். மேலும் ரெட்மி தயாரிப்புகளின் புதுமையை வாடிக்கையாளர்கள் அணுகக்கூடிய விலையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த வேறுபாடுகள் அனைத்து புதுப்பிக்கப்பட்ட லோகோவில் பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளது. இதனுடன் ஜியோமி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 80 கோடி போன்களை சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!