உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் – இந்தியா முதலிடம்!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் - இந்தியா முதலிடம்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் - இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் – இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசை பட்டியல் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் :

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேராக கோப்பைக்கான போட்டியில் மோதிக் கொள்ளும். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பைனலில் இந்தயா-நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Tokyo Paralympics 2020: டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல் படேல் அதிர்ச்சி தோல்வி!

தற்போது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் (2021-2023) தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளின் (ஆகஸ்ட் 24) அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

IPL சூதாட்டம் – ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!

இரண்டாவது இடத்தில் 12 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில 12 புள்ளிகளுடன் விண்டீஸ் அணியும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் விண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினர். அதில் தலா ஒரு வெற்றி பெற்றதன் மூலம் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் இன்னும் டெஸ்ட் கணக்கை துவங்கவில்லை என்றாலும் வரும் போட்டிகளில் முன்னிலை மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (ஆக்.25) துவங்க உள்ளது. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இத்தொடரில் நடைபெற உள்ளதால் அவற்றின் முடிவும் தரவரிசையில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!