சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – நாளை எழுத்துத் தேர்வு தொடக்கம்!

0
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - நாளை எழுத்துத் தேர்வு தொடக்கம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - நாளை எழுத்துத் தேர்வு தொடக்கம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – நாளை எழுத்துத் தேர்வு தொடக்கம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (31.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (01.08.2021) ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது. இந்த எழுத்துத் தேர்வை சேலம் மாவட்டத்தில் மொத்தம் 19,600 பேர் எழுத உள்ளனர்.

எழுத்துத் தேர்வு :

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏராளமனோர் வேலையிழந்து உள்ளனர். அதனால் வேலைவாய்ப்பு பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற துறைகளை போல நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜூடிசியல் ரெக்ரூட்மெண்ட் செல் என்ற அமைப்பு நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது.

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.37% பேர் தேர்ச்சி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் நடைபெறவுள்ளது. அங்கு 19,600 பேர் பங்கேற்கும் இந்த தேர்வானது நாளை (31.07.2021) மற்றும் ஞாயிற்று கிழமை (01.08.2021) ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த கூட்டத்தில் தேர்வு மையத்தின் களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தேர்வை நடத்தும் முறை பற்றியும், தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. தேர்வர்களுக்கு உதவும் வகையில் மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கேட்டு எழுத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தேர்வர்களும், அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!