தமிழ் திரையுலக பிரபல கவிஞர் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார் – ரசிகர்கள் இரங்கல்!

0
தமிழ் திரையுலக பிரபல கவிஞர் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார் - ரசிகர்கள் இரங்கல்!
தமிழ் திரையுலக பிரபல கவிஞர் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார் - ரசிகர்கள் இரங்கல்!
தமிழ் திரையுலக பிரபல கவிஞர் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார் – ரசிகர்கள் இரங்கல்!

தமிழில் பிரபலமான கவிஞரும் காமராஜர் திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் மறைவு:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ பிரான்சிஸ் கிருபா. 90’s களுக்குப் பிறகு கவிதைகளில் கணிசமான பங்களிப்பு காரணமாக நவீன தமிழ் கவிதை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட கவிஞராக திகழ்ந்தார். இவரது முக்கிய கவிதை தொகுப்புகளான மல்லிகை கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் போன்றவை ஆகும். இந்த கவிதைகள் மூலமாக காதலையும் வாழ்வின் வலிகளை பற்றி விளக்கி இருப்பார்.

திருப்பூரில் செப்.18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் ஏராளமான புதினங்களையும் எழுதியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. தனது படைப்புகளுக்காக 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது, சம்மனசுக்காடு கவிதை தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது மற்றும் மீரா விருது, ஆனந்த விகடன் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, நித்திலன் சுவாமிநாதனின் குரங்கு பொம்மை மற்றும் ராட்டினம் ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

எந்த இயக்கத்திலும், குழுவிலும் தன்னைப் பொருத்தி கொள்ளாமல் பெரும்பாலும் தனிமையில் இயங்கியவர் பிரான்சிஸ் கிருபா. எனினும் தொடர்ந்து தமிழ் இலக்கிய வெளியில் கவனிக்கப்பட்டு வருபவராக இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை இரவு பிரான்சிஸ் கிருபா காலமானார். பிரான்சிஸ் கிருபாவின் உடல் இறுதிச் சடங்கிற்காக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கவிஞர் இறப்பிற்கு திரையுலகில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!