முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!

0
முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!
முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்யா போர்? பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை! உலக நாடுகள் எதிர்பார்ப்பு!

கடந்த 5 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் பெலாரஸில் வைத்து இன்று (பிப்.28) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உடன்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளது.

போர் முடிவு

கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தற்போது நேட்டோ அமைப்பில் சேருவதற்கு முயற்சித்து வந்த உக்ரைனை மீண்டுமாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஒரு சில வாரங்களுக்கு முன்பாக, உக்ரைன் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவத்தை குவிந்திருந்த ரஷ்யா போருக்கான ஆயத்தத்தை பறைசாற்றி இருந்தது. அதனால், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று உலக நாடுகள் எச்சரித்து வந்தது.

தமிழ், சரஸ்வதியை வீட்டிற்கு வர சொன்ன கோதை, தவிடுபொடியான சந்திரகலாவின் திட்டம் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை துவங்கியது. இந்த போர் மெல்ல மெல்ல அதிகரித்து வர, இரு தரப்பினரிடமும் பெரிய அளவு உயிர் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக பல அப்பாவி மக்கள் வீடுகளை இழந்து வீதிகளை தேடிப்போக ஆரம்பித்தனர். இந்த போரால் இதுவரை 3.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. மறுபக்கத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக கரம் நீட்டும் எந்தவொரு நாடும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.

இப்போது இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரில் மற்ற நாடுகள் தலையிட்டால் அது உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று அஞ்சிய அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகள் இதில் தலையிடவில்லை, இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக பணம் மற்றும் ராணுவ தளவாடங்களை அளித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு கரம் நீட்டியது. இதற்கிடையில் ரஷ்யாவின் இந்த கொடூரமான நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தது.

ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – உக்ரைன் முன்வைத்த நிபந்தனை! ஏற்குமா ரஷ்யா?

அதே போல ரஷ்ய அரசுக்கு எதிராக பொது மக்கள் பலரும் குரல் எழுப்ப துவங்கினர். இப்படியே கிட்டத்தட்ட 5 நாட்களாக நடைபெற்று வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம், ஐநா கண்டனம் என உருவான தொடர் அழுத்தங்களால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அறிவித்தது.

இந்த பேச்சுவார்த்தை பிரச்சனை ஆரம்பித்த பெலாரஸில் வைத்து நடத்த ரஷ்யா நிர்பந்தித்ததால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதற்கு மறுப்பு தெரிவித்து புட்டாபெஸ்ட் அல்லது இஸ்தான்புல் போன்ற அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உடன்பட்டார். ஆனால் ரஷ்யா இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், பெலாரஸில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று (பிப்.28) நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டால் அதன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!