உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் உலக நாடுகள் – நீடிக்கும் பதற்றம்!
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, லூதுவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போராட்டம்
உக்ரைன் மீதான போராட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் போராட்டத்தில் குதித்துள்ளது. ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சட்டவிரோதமான போரில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை நூற்றுக்கணக்கான வீரர்களை கொன்று குவித்திருக்கிறது. அந்த வகையில் நேற்று (பிப்.24) முதல் துவங்கி இருக்கும் இந்த யுத்தத்தில் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவை தாக்கியதில் மக்கள் பலரும் உயிருக்கு அஞ்சி அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். தவிர பலர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை விடுமுறை ரத்து!
தொடர்ந்து இன்று (பிப்.25) அதிகாலை 3 மணியளவில் மீண்டுமாக துவங்கி இருக்கும் 2வது நாள் போராட்டத்தில் தலைநகர் கீவில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, லூதுவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஷ்யாவின் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை முடிவு!
அதே போல உக்ரைனுக்கு ஆதரவாக லூதுவேனியாவில் செல்போன் விளக்குகளை ஒளிர வைத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்ததை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும் இது குறித்து அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு பதட்ட நிலை நீடித்து வருகிறது.